Saturday, August 30, 2008

புல்லரிக்க வைக்கும் தமிழ்ப் பற்று!


பணத்துக்கு முன் கொள்கையாவது, விளக்கெண்ணையாவது... இதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் தமிழினக் காவலர்களில் ஒருவரான சரத்குமார்.

ஒகேனக்கல் பிரச்சினையில் வாய் கிழிய கன்னடர்களைத் தாக்கிப் பேசிய அதே வீராதி வீரன் சரத்குமார் இப்போது என்ன செய்திருக்கிறார் தெரியுமா... சத்தம் போடாமல் ஒரு கன்னடப் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு அட்வான்ஸ் கூட வாங்கி விட்டார்!

‘என் படத்தை தமிழர்கள், அதுவும் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பார்த்தால் போதும். கர்நாடகத்தில் அந்தப் படம் ரிலீசாக வேண்டிய கட்டாயமில்லை (அப்படியே தப்பித் தவறி ரிலீசானாலும் யார் பார்ப்பார்கள்?). தமிழர்களுக்கு எதிராக கொடுமைகளை அரங்கேற்றும் கன்னடர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவோம். பெங்களூரில் தமிழர்கள் இருக்கலாம். சென்னையில் கன்னடர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்...’ இப்படியெல்லாம் வெற்றுப் பப்ளிசிட்டிக்காகப் பேசிய சரத்குமாரின் நிஜமான கோர முகத்தை மீண்டும் ஒரு முறை தமிழர்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஓம் பிரகாஷ் என்ற கன்னடப் பட இயக்குநரின் பிரமாண்ட மும்மொழிப் படத்தில் இந்த சரத்மார்தான் ஹீரோ. தமிழ் மற்றும் இந்தியிலும் இந்தப் படம் தயாராகிறது. கன்னடத்தில் நேரடிப் படம் இது.

இந்தப் படத்தை மட்டும் பிரச்சினையில்லாமல் ரிலீஸ் செய்ய விட்டு விடுவார்களா கன்னட அமைப்பினர்?

அப்போது யார் காலில் விழுந்து தன் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார் இந்த சரத்குமார் என்பதைப் பார்க்க ரஜினிக்கு வேண்டுமானால் ஆர்வமில்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது லட்சோப லட்சம் ரசிகர்கள் தீயாய் எரியும் மனதோடு காத்துக் கிடக்கிறார்கள்.

ரஜினியின் தகுதிக்கும் தரத்துக்கும் நேர்மைக்கும் சரத் குமாரைப் பற்றி இங்கே எழுதுவதுகூட நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிற விஷயம்தான். ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பொது மனிதர்களுக்கும் இந்த மாதிரி போலி அரசியல்வாதி – நடிகரின் நிஜ முகம் தெரிய வேண்டுமல்லவா...

ஆரம்ப நாட்களில் அதிமுக தலைவி ஜெயலலிதாவின் கால்பிடித்து சுற்றி வந்தவர், பின்னர் சில பல கோடிகளில் வந்த சண்டை காரணமாக திமுகவில் தஞ்சம் புகுந்து பதவிகளை அனுபவித்துப் பின்னர் அவர்களுக்கும் துரோகம் செய்து, 10 கோடி ரூபாய்க்கு மனைவியுடன் மீண்டும் ஜெயலலிதாவிடமே விலை போனவர் இந்த சரத்குமார்.

கொள்கை, கோட்பாடு, தமிழர் நலம் என முழங்கும் இவரிடம் அவற்றுக்கான அர்த்தம் பற்றிக் கேட்டால் அரைகுறை ஆங்கிலத்தில் உளறுவார். அவ்வளவுதான்.

இந்த சுப்ரீம் காப்பி ஸ்டாருக்கு கதை கேட்கும்போது கூட சொந்தமாக யோசிக்கத் தெரியாது. உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா...

இவர் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், ரஜினி சாருக்கு எப்படி சீன் பண்ணுவீர்களோ அப்படிப் பண்ணுங்கள் எனக்கும், என்றுதான் முதல் கண்டிஷனே போடுவாராம். என்னதான் விளக்கெண்ணெயோடு புரண்டாலும் ஒட்டுகிற மண்தானே ஒட்டும்...

ஓரளவு யோசிக்கத் தெரிந்த அனைவருமே இவரது பச்சோந்தித்தனத்தைப் புரிந்தவர்கள்தான். ஆனால் என்ன செய்வது... இன்றைக்குப் பொய்கள் அலங்காரமாய் மேடையேறி ஆரவாரமாய் கிரீடம் சூடிக் கொள்கின்றன, நிஜம் மௌனமாய் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கிறது!

9 comments:

Anonymous said...

Thalai,
Edachum urupadiyana kisu kisu nachum podunga.....
Tamil cinema nala irukara ore prayojanam : nalu kisu kisu + nalu kutti paakarathu thaan.....adhukku mela neeenga thala keela ninnalum Rasini, sarath, satyaraj ellar kadhaiyum naatha kathai thaan.....

People are not living in M.G.R or M.K.T.Bhagavathar periods.....Once these two were as legendary and equal to Superstar....Now nobody remembers them....

Vaanathin Keezhe... said...

Friend...
This is the real problem with us!

Anonymous said...

Excellent..Good Job!

Anonymous said...

Pottu thaakunga....arumaiyaana posting. Pls do continue to tear mask of persons like this.

Anonymous said...

He left his wife and two kids on the street and living with a women now. How the hell he will be the example to others? He is a leader too! I do not believe in god ( I do not say there is no god (after seeing super star only) ) but after seeing people like him I am pretty sure I may say there is no god.

Unknown said...

Good posting bringing the truth to atleast the people who visit here.

By the way, Sarath Kumar need not fall on anybody's feet to release his film in Karnataka.

Because, even in Karnataka, the trouoble making elements will raise their voice against Rajini and his films alone.

If u remember, during the release of Sivaji there were lot of restrictions on the number of prints for other language films in Bangalore/Karnataka. And many people were raising their concerns and trying to publicise their "love" for Kannada.

But, later few Telugu films were released in more number of theaters. Forget those, even 10A was released in many theaters and there was not even a fart from these "so-called" protectors of Kannada. These people are not interested in protecting or nurturing Kannada. They are just interested in increasing their bank balance and their popularity.

That will happen only if they create some trouble to people like Rajini.

திவியரஞ்சினியன் said...

சரத்குமாரின் இன்னொரு தமிழ்பற்றை காண தயவுடன் என் தளத்திற்கு வந்து செல்லுங்களேன். நாங்களும் பணம் கொடுத்து படம் பார்க்கும் தமிழ்க் கூட்டந்தான்.வெளிநாடுகளில் எங்களின் பணத்தில்த்தான் பெரும்பகுதி தமிழ்படங்கள் வெளியாகிறது.ஆனால் எங்கள் நாட்டுக்கு வந்து இரகசிய வர்த்தகங்களை தமிழினத்தின் துன்பத்துக்கான காரணிகளுடன் செய்துவிட்டு மகிழ்வுடன் இருக்கும் சரத்குமாரின் இன்னொரு தமிழ்ப்பற்றுபற்றி தெளிவுற........

http://thiviyaranchiniyan.blogspot.com/2008/08/blog-post_316.html

Anonymous said...

Gr8 work !!!I believe no one will bother abt his/sathyaraj's film in Karnataka.

Anonymous said...

எப்படியோ, ரஜினியின் படம் ஒன்று முழுக்க முழுக்க ஹாலிவுட் பிரமாண்டங்களுக்கு இணையாகத் தயாராவது ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் வியாபார எல்லைகளையே விரிவடையச் செய்திருக்கிறது என்பதே உண்மை.////


biggest joke forever.. paavam shankar